தெலுங்கில் விறுவிறுவென தயாராகி வரும் அசுரன் காப்பி !

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் நரப்பா என்கிற தலைப்பில் வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்க படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரீமேக் என்பதே இருப்பதை அப்படியே காப்பிபடிப்பது என்பதுதான் அர்த்தம் கொள்ளலாம். குறைந்த பட்சம் கொஞ்சமாவது மாற்றியெடுப்பார்கள். ஆனால் நரப்பா படக்குழுவினர் அப்படியெல்லாம் மெனக்கடவில்லை போல் தெரிகிறது. ஏனெனில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தமிழில் தனுஷ்க்கு கொடுத்திருந்த அதே கெட்அப் தெலுங்கில் வெங்கடேஷுக்கும் கொடுத்துள்ளார்கள். தனுஷ் அணிந்திருந்த முக்கால் வேஷ்டி, நீளமான காக்கி கலர் சட்டை, தலையில் சுற்றப்பட்ட பச்சை கலர் துண்டு, கனமான மீசை, கறைபடிந்த பல், நெற்றியில் விபூதி என்று அப்படியே அசுரனை பார்த்ததுபோல் உள்ளது தெலுங்கு நரப்பா. இப்படி செலவு செய்து அப்படியே காப்பியடிப்பதற்கு பதிலாக நேரடியாக தெலுங்கில் அசுரனை டப் செய்திருக்கலாம் என்கின்றனர் திரையுலகினர்.