தெலுங்கில் வெளிவந்த ‘ஏஜெண்ட் பைரவா’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ!

இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம் 'பைரவா'. இப்படம் தமிழ் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் 'ஏஜெண்ட் பைரவா என்ற பெயரில் ரிலிஸ் ஆனது. அங்கு இப்படம் மூன்று நாள் முடிவில் ரூ 1.3 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், விநியோகஸ்தர்களுக்கு ஷேராக ரூ 68 லட்சம் கிடைத்துள்ளது, ரூ 63 லட்சம் வந்தாலே படம் ஹிட் தான் என கூறப்பட்டது. இப்படம் மிகவும் குறைந்த முதலீட்டில் தான் இப்படத்தை அங்கு ரிலிஸ் செய்துள்ளார்கள், இதன் மூலம் தெலுங்கில் பைரவா ஹிட் ஆகியுள்ளது .