தெலுங்கு திரையுலகில் நயன்தாராவிற்கு நடிக்க தடை ?

நயன்தாரா சிரஞ்சீவிக்கு ஜோடியாக சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவி மகன் ராம் சரண் படத்தை தயாரிக்கிறார். பல கோடி செலவில் இப்படம் தயாரிக்கப்படுவதால் பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ராம் சரண் ஒப்பந்தம் செய்யும்போதே நயன்தாராவிடம் கேட்டுக்கொள்ள அவரும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் கலந்து கொள்வதாக கூறினாராம். ‘சைரா’ படம் முடிந்து அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் விளம்பர வேலைகளில் ராம் சரண் ஈடுபட்டுள்ளார். நிகழ்ச்சியில் நயன்தாராவை பங்கேற்பதற்கு உறுதி செய்ய, ராம சரணின் மேனேஜர் நயனை பலமுறை போனில் அழைத்தும் சரியான பதில் இல்லை என்கிறார்கள்.  இது சிரஞ்சீவி, ராம் சரணுக்கு தெரியவர அவர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம். நயன்தாரா தரப்பில் கேட்டால், ‘படங்கள் அதன் கதையை பொருத்தே வெற்றி பெறுகிறது. புரமோஷனை பொறுத்து அல்ல’ என பதில் கூறியிருக்கிறார். நயன்தாரா மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவும் அவர் தெலுங்கில் நடிப்பதற்கு தடை விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு படம் முடிந்தபிறகும் அதை ரசிகர்களிடம் பிரபலப்படுத்த விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஆனால் நயன்தாரா, தான் நடிக்கும் எந்த படத்துக்கும் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்றும் பேட்டிகள் கொடுப்பது இல்லை என்றும் கொள்கை வைத்து இருக்கிறார்.