Cine Bits
தெலுங்கு நடிகருடன் காதலா ரெஜினா?

கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயம் ஏன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். திரையில் இருவருக்கும் காதல் காட்சிகள் இயல்பாக வந்ததால் இருவரும் நிஜமாகவே காதலிப்பதால் தான் அப்படி நடிக்க முடிந்தது என்று பேச்சு எழுந்தது. திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அவர்களின் நடிப்பு தற்போது காதலாக மலர்ந்திருப்பதாக திரையுலகினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது. இதுகுறித்து சாய் தரம் தேஜிடம் கேட்டபோது ஒரே வரியில் பதில் அளித்தார். அவர் கூறும்போது, நானும் ரெஜினாவும் உண்மையான நண்பர்களாக இருக்கிறோம் என்றார். ரெஜினாவும் அந்த பதிலையே ஆமோதித்தார்.