தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் -யை இயக்கப்போகும் நடன இயக்குனர் ராஜு சுந்தரம் !

ராஜு சுந்தரம் இந்தியாவிலேயே மிகச்சிறந்த, மிக பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர். இவர் அஜித்துடன் இணைந்து ஏகன் என்ற படத்தை கொடுத்தார், இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து பல வருடங்களாக படம் இயக்காமல் இருந்த இவர், தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஆனால், இந்த முறை தெலுங்குப்பக்கம் சென்றுள்ளார், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஷர்வானந்த் நடிக்கும் ஒரு படத்தை ராஜு சுந்தரம் இயக்கவுள்ளார்.