தேசிய கராத்தே போட்டியில் நடிகர் சூர்யா மகன் சாதனை !

நட்சத்திர தம்பதிகளான சூர்யா-ஜோதிகாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் இரு குழந்தைகளும் பங்கேற்று வருகிறார்கள். மகள் தியா சமீபத்தில் மாநில அளவில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார். மகன் தேவ் டெல்லியில் தேசிய அளவில் நடந்த ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.