தேசிய நீச்சல் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற மாதவன் மகன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மாதவனின் மகன் வேதாந்த் ஒரு நீச்சல் வீரர். அவர் தொடர்ந்து நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்று தாய், தந்தைக்கு பெருமை தேடிக் கொண்டிருக்கிறார். ஜூனியர்களுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். தேசிய அளவில் தனியாக பதக்கம் வாங்குவது இதுவே முதல் முறை. அடுத்து ஆசிய போட்டிகள். பயிற்சியாளர்கள், குழுவினருக்கு நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்காக வேதாந்த் வென்ற முதல் பதக்கம் அது.  வேதாந்த் மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று அனைவரும் வாழ்த்துகிறார்கள். தன் மகனை மனதார வாழ்த்துபவர்களுக்கு மாதவன் நன்றி தெரிவித்துள்ளார்.