தேசிய விருது – தவறவிட்ட தமிழ் படங்கள் !

தேசிய விருது பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, அதை தவறவிட்ட தமிழ் படங்கள் எவை என தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் 66வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த தமிழ் படமாக பாரம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம் படத்தை பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை , ராம்குமாரின் ராட்சசன், பிரேம்குமாரின் 96, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா ஆகிய படங்களும் விருது பட்டியலில் இடம் பெற்றிருந்தன. மேலும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல தமிழ் படங்களுக்கு எந்த பிரிவிலும் விருது கிடைக்கவில்லை. அவற்றில் ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம், விஷால் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற இரும்புத்திரை, 2.0, சீதக்காதி உள்ளிட்ட படங்களுக்கு விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.