தேசிய விருது பெற்ற இந்தி படத்தின் ரீமேக்கில் பிரசாந்த்!

இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்த திரைப்படம் ’அந்தாதுன்’. ஹிந்தி சினிமாவில் இளம் நடிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். அதில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்கள் தேர்வு செய்து நடிப்பவர் ஆயுஷ்மான் குர்ரானா. இவர் நடித்த படங்களில் படு ஹிட்டடித்த படம் அந்தாதூன். இந்த படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன் அவர்கள் வாங்கியிருப்பதாகவும் நடிகர் பிரசாந்த் படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறாராம். குறித்து நடிகர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,'அந்தாதுன்’ கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்' என்றார். தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது என்றும் தியாகராஜன் தெரிவித்தார் இந்த தகவல் அரிந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.