தேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் !

மகாநதி படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனாக சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் ஊடகங்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ஊடகங்கள் தான் இந்த படத்திற்கான மதிப்பீடுகளை முதன் முறையாக நல்ல முறையில் தந்ததாகவும், இந்த படம் கண்டிப்பாக விருது பெறும் என்கின்ற உத்வேகத்தை அவை அளித்ததாகவும் தெரிவித்தார்.