தேர்தலால் தாமதமாகும் ரஜினியின் படம் !

ஏ.ஆர்.முருகதாஸ் முந்தைய படங்களில் லஞ்சம், விவசாயிகள் பிரச்சினைகள், ஊழல் ஆகியவற்றை சொல்லி இருந்தார். அவர் சொன்ன கதை பிடித்ததால் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பை இந்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். இதற்காக அரங்குகள் அமைக்கும் பணியையும் ஆரம்பித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து பண நடமாட்டங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. இதனால் ரஜினிகாந்த் படப்பிடிப்பு செலவுகளுக்கான தொகையை கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை தேர்தல் முடிந்த பிறகு அடுத்தமாதம் இறுதியில் தொடங்கலாம் என்று தள்ளிவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.