தேர்தலில் யாருக்கு ஓட்டு? – இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து !

தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது குறித்து இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம். மேலிடத்தில் ரூபாய் வாங்காத கட்சிக்கு என்று கூறியுள்ளார். டைரக்டர் சேரன் டுவிட்டர் பக்கத்தில், மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கொதிப்படைய செய்து வாக்கு சேகரிப்பதும் ஒரு வகையில் தவறான அணுகுமுறைதான். பேச்சிலும் கவர்ச்சியிலும் மயங்கித்தான் 50 வருடங்கள்…. நிதானமாக ஒவ்வொரு தலைவரின் உரை, இருக்கும் பிரச்சினைகள், அவர்கள் எடுத்து வைக்கும் தீர்வு என அலசுங்கள். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், சுதந்திர இந்தியாவில் ஓட்டுபோட ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் 23 வயதில் தூக்கிலிடப்பட்டார் பகத் சிங் என்னும் இளைஞன். அந்த ஓட்டு இப்போது உன் கையில் இளைஞனே மறந்து விடாதே என்று பதிவிட்டுள்ளார்.