Cine Bits
தேர்தலில் விஜய் படம், கொடியை பயன்படுத்த தடை !
ஒரு அரசியல் கட்சிக்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்துக்கு மாவட்ட, நகர, ஒன்றிய அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை உருவாக்கி அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் வலுவான அமைப்பாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தனது படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை ரசிகர்கள் பயன்படுத்த கூடாது என்றும், பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து கொள்ளலாம் என்றும் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்மன்ற நிர்வாகிகள் மூலம் இந்த தகவல் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.