தேவர் மகன்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், தேவராட்டம் படத்தை மட்டும் எதிர்ப்பது ஏன்? – குமுறும் குணச்சித்திர நடிகை !

நேற்று ரிலீஸான ‘தேவராட்டம்’ படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வழக்கமான முத்தையாவின் படங்களைப்போலவே ஜாதி வெறி பிடித்த படமாக இருப்பதாக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் பதிவுகளுக்கு கண்டனம் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்ச்சித்திர நடிகையாக நடித்திருக்கும் மகாலட்சுமி சாதி வெறி குறித்து கமல் ’தேவர் மகன்’ படத்தை எடுத்தபோது அமைதியாக இருந்தவர்கள்  இப்போது ’தேவராட்டம்’ படத்துக்கு எதிராக ஏன் பொங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் நடிகை மகாலட்சுமி. தேவர் ஆட்டம், வன்னியர் ஆட்டம், நாயக்கர் ஆட்டம் என்று அத்தனை ஜாதிகளையும் அடுக்கி இறுதியில் ஒரு தவறான வார்த்தையுடன் அதை முடிக்கிறார்கள் இதே போல் வார்த்தைகள் பேசுவது அநாகரீகமானது என்பது கூட தெரியவில்லை. யாரையும் யாரும் பேசக்கூடாது என்பதே என் எண்ணம். எல்லா விசயங்களும் பொதுவான பதிவுகள் போடுவது தான் என் வழக்கம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.