தேவர் மகன் 2- ம் பாகத்தில் மீண்டும் கமல் இணைகிறார் ரேவதி !

கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான். முன்னதாக இந்த படம் தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகம் என்ற ரீதியில் செய்திகள் வந்தன. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமானார். தற்போதைய தகவல்படி தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இந்த படத்திலும் நடிக்க இருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.