தேவ் படத்தோல்வியால் நடிகை ராகுல் ப்ரீத் படவாய்ப்புகள் பறிப்பு!

நடிகர் கார்த்தியின் தேவ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ராகுல் ப்ரீத் சிங். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை. அதனால் படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி என கூறப்பட்ட நிலையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்கவிருந்தார். ஆனால் அந்த வாய்ப்புகள் தற்போது கையை விட்டு சென்றுவிட்டதாம். வெங்கி மாமா என்கிற படத்தில் அவர் நடிக்கிறார் என கூறப்பட்டது, ஆனால் அதில் தற்போது வேறொரு நடிகை நடிக்கிறார். மேலும் தமிழில் ஹிட் ஆன ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராகுல் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. அந்த படத்தின் ஷூட்டிங் நேற்று துவங்கிய நிலையில், அதிலும் ராகுல் இல்லை என தெரிவித்துள்ளார்.