தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று திரையுலகில் அறிமுகமாகும் நட்சத்திரா !

முன்னணி தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நட்சத்திரா நாகேஷ். அதன் பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பொது விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் தொகுத்துவழங்கினார். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர் ஆகிய தொடர் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு சேட்டை,வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் . தற்பொழுது வணிகன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்கிறார். வி.பி.டேனியல் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பாடல்களை கேட்ட யுவன் ஷங்கர் ராஜா படத்தின் பாடல்களின் உரிமையை வாங்கியிருக்கிறார். இது படக்குழுவினருக்கு கிடைத்த முதல் வெற்றியாக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.