தொடங்கியது சென்னையில் புத்தகக்கண்காட்சி!

சென்னையில் தென்னிந்திய விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பாக ஆண்டுதோறும் புத்தகக்கண்காட்சி நடைபெற்றுவருகிறது. 42 -வது புத்தகக்கண்காட்சியையை தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி ஜனவரி 4 -ஆம் தேதி துவக்கிவைத்தார்.நந்தனம் ஒய்.எம்.சியே மைதானத்தில் மொத்தம் 820 அரங்குகள் அமைக்கப்பட்டு அறிவியல் கண்டுபிடிப்பு,பொதுஅறிவு,சிறுகதைகள் என சிறுவர் முதல் பெரியவர்கள் என அனைத்துத்தரப்பினர்களுக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஒன்றரை  கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தெரிவித்துள்ளனர். வாரநாட்களில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 9 மணி வரை  விடுமுறைநாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரையும் நடைபெறுகிறது.புத்தகக்கண்காட்சிக்கான நுழைவு சீட்டு ஆன்லைனில் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.