Cine Bits
தொடர் சர்ச்சைகளால் நயன்தாராவின் கொலையுதிர்காலம் ரிலீஸ் தள்ளிவைப்பு !
இரண்டு வருடங்களுக்கு முன்பே கொலையுதிர் காலம் படப்பிடிப்பு தொடங்கியது. படம் பாதி முடிந்த நிலையில் நயன்தாராவுக்கும் படக்குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படம் முடிவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு கொலையுதிர் காலம் படவிழாவில் நடிகர் ராதாரவி பங்கேற்று நயன்தாரா பற்றி பேசியது சர்ச்சையை உருவாக்கியது. இந்த பிரச்சினை அடங்கி படத்தை நேற்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் கொலையுதிர் காலம் தலைப்பை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் படத்துக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கொலையுதிர் காலம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார். தொடர்ந்து சர்ச்சைகள் எழுவதால் இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.