தொழிலை கவனிப்பதற்கே நேரம் போய்விடுகிறது – நடிகை ராதா மனம் திறக்கிறார்!

பாரதிராஜா சார் என்னை ஹீரோயினா தேர்வு செய்துட்டார். தொடர்ந்து ஓய்வில்லாம நடிச்சேன். 10 வருஷம் பிஸியா நடிச்சேன். நல்லா சம்பாதிச்சேன். இந்த நிலையில், கல்யாணம் செய்துகிட்டேன். இனி நடிக்க வேண்டாம்னு அப்போ முடிவெடுத்தேன். கணவர், என் மூணு குழந்தைகள்னு குடும்பம்தான் என் உலகமா ஆச்சு. என் கணவர் பிசினஸை கவனிச்சுகிட்டார். நான் மூணு குழந்தைகளையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். அந்த அம்மா பொறுப்புதான், என் வாழ்க்கையில மிகச் சிறந்த வேலை” என்கிற ராதா, தற்போது பிஸியான பிசினஸ் உமன். ஸ்கூல், மும்பையிலுள்ள பல ரெஸ்டாரன்ட்ஸ், சினிமா தியேட்டர்னு பல தொழில்களை நடத்திட்டு இருக்கிறோம். எங்க அனுபவம்கூடக்கூட பிசினஸ் பயணத்தையும் விரிவுபடுத்திட்டே இருக்கிறோம். இப்போ 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எங்ககிட்ட வேலை செய்றாங்க. தொடர்ந்து பிஸியா இருக்கிறது நல்ல அனுபவம். பிசினஸ் வேலைகளைக் கவனிச்சுக்கவே நேரம் போதலை. இதுக்கிடையே நடிக்க, நான் பெரிசா கவனம் செலுத்தவில்லை என்கிறார்.