தோழிகளாக வலம் வரும் நயன்தாரா – தமன்னா!

நயன்தாராவுக்கு சக நடிகைகளில் நெருக்கமான தோழி என்று கூறிக்கொள்ளும் வகையில் யாரும் இல்லா விட்டாலும் மீடியாக்களால் மோதலில் தொடங்கிய பிரச்னை நயன்தாராவையும், திரிஷாவும் தோழிகளாக இணைத்தது. இந்த நட்பு விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த படத்தில் இருவரையும் இணைத்து நடிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்தது. யார் கண்பட்டதோ அதில் சர்ச்சை ஏற்பட்டு திரிஷா நடிக்காமல் ஒதுங்கி விட்டார். இதனால் அப்படம் ஆரம்பநிலையிலேயே நிற்கிறது. இதற்கிடையில் நயன்தாராவுக்கு புதிய தோழியாக கிடைத்திருக்கிறார் தமன்னா. சிரஞ்சீவி நடிக்கும், ‘சயிரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் முக்கிய வேடத்தில் தமன்னா நடிக்கிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இதில் அமிதாப்பச்சனும் பிரதான வேடத்தில் நடிக்கிறார். நயன்தாராவுக்கும், தமன்னாவுக்கும் நட்பு மென்மையாக தொடர்வதையடுத்து சிரஞ்சிவி நடிக்கும் புதிய படத்தில் இந்த இரண்டு ஹீரோயின் களும் இணைந்து நடிக்க உள்ளதாக பட தரப்பிலிருந்து தகவல் கசிகிறது. சிரஞ்சீவியின் 152வது படமாக உருவாகும் இதை கொரட்டலா சிவா இயக்க விருக்கிறார்.