Cine Bits
த்ரிஷாவின் ‘குற்றப்பயிற்சி’ படம்

ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி.விவேகானந்தன் தயாரிக்கின்ற குற்றப்பயிற்சி என்ற படத்தை பாலாவின் உதவியாளராக இருந்த வர்ணி இயக்குகிறார். இதில் த்ரிஷா வித்தியாசமான வேடத்தில் பெண் துப்பறிவாளராக நடிக்கிறார். இவருடன் சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். த்ரிஷாவின் படம் கடந்த ஆண்டு ஒன்றும் வெளியாகவில்லை. ஆனால் இந்த ஆண்டு அவர் நடித்த பல படங்கள் வெளியாக உள்ளது. இந்த படம் 1980ம் காலகட்டத்தில் நடந்த கதையை உண்மை சம்பவமாக எடுக்கப்படுகிறது. இதில் ரதன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.