நகைக்கடையின் விளம்பர தூதராக நயன்தாரா நியமனம் !

டாடா குழுமத்தை சேர்ந்த ‘தனிஷ்க்’ நகைக்கடை விளம்பர தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டு உள்ளார். விளம்பர தூதராக நியமிக்கப்பட்டது குறித்து நயன்தாரா கூறுகையில், தனிஷ்க் மக்கள் மனதில் இடம்பிடித்த பிராண்ட் ஆகும். அந்த பிராண்டின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். இங்குள்ள நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட நகைகள் என்னை ஈர்த்து உள்ளன. ‘தனிஷ்க்’ உடனான எனது இந்த உறவு என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது, என்றார். புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் நயன்தாரா, ஒப்பந்தப்படி அட்சய திருதியை முதல் ‘தனிஷ்க்’ நகைக்கடையின் அனைத்து விளம்பரங்கள், பிரசாரங்கள், பத்திரிகை விளம்பரங்கள், வெளி விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.