நக்சலைட் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி !

மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார். தற்போது விராட பருவம், என்.சி 20 ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் வருகிறார். போலீஸ் அதிகாரிக்கும் பெண் நக்சலைட்டுக்கும் மலரும் காதலை மையமாக வைத்து தயாராகிறது. அதிரடி சண்டையும் அரசியலும் படத்தில் உள்ளன. சாய்பல்லவி நக்சலைட்டாக நடிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்பின. வளர்ந்து வரும் நடிகை இப்படி நடித்தால் இமேஜ் பாதிக்கும் என்றும் பலர் அறிவுரை சொன்னார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த படத்தில் நடிக்கிறார்.