நடன இயக்குநர் கலா தினகரன் கட்சியில் இணைந்தார்!

பிரபல சினிமா நடன இயக்குநர் கலா டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஆறு மாதமாக வேறொரு பணியில் இருந்தேன். என் நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தப் போது தினகரனின் நேர்மையான பேச்சு, துணிச்சலான செயல்பாடுகள், எதையும் நேரடியாகச் சொல்லும் குணம் என்னைக் கவர்ந்தன. மேலும் கட்சியில் எனக்கு என்ன பணி கொடுத்தாலும் உழைப்பேன். நான் 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். என்னுடைய கடின உழைப்பு பற்றி  எல்லோருக்கும் தெரியும். அதனால் என்ன பணி என்றாலும் யோசிக்காமல் பணியாற்றுவேன். இவ்வாறாக அவர் கூறினார். இதற்கு முன்னராக  பிரபல சினிமா பாடகர் மனோ டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.