நடிகராக அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி அண்ணன் !

ஜெயம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மோகன் ராஜா, தொடர்ந்து தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து பல படங்கள் இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வந்தார். அதற்கு பிறகு, நடிகர் விஜய்யின் வேலாயுதம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள மோகன் ராஜா, விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகநாத் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர். ஈ, பேராண்மை, புறம்போக்கு என்னும் பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதனின் உதவி இயக்குநராக இருந்த வெங்கட கிருஷ்ணா ரோகநாத், இந்த படத்தின் மூலம் இயக்குநராகிறார்.