நடிகரானது குறித்து மகிழ் திருமேனி !

மீகாமன்', தடம் என மகிழ் திருமேனி எடுக்கும் படங்கள் மட்டுமல்ல, மகிழ் திருமேனியே சில முறை நம்மை ஆச்சர்யப்படுத்திவிடுகிறார். பல லேயர் திரைக்கதையோடு படம் எடுத்துக்கொண்டிருந்தவர் திடீரெனப் பின்னணிக் குரல் கலைஞராகி, `இமைக்கா நொடிகள்' படத்தில் திரையில் நடித்து மிரட்டிய அனுராக் காஷ்யப்புக்குக் குரல் கொடுத்து திரைக்குப் பின்னாலிருந்து மிரட்டினார். தற்போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். விஜய் சேதுபதி, அமலா பால் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி 33 ஒரு பன்னாட்டுக் கதைக்களம் கொண்ட இந்தப் படம் இசைக் கலைஞர்களின் வாழ்வியலைக் குறித்தது. இப்படத்தில் மகிழ் திருமேனி இணைந்துள்ளார். இப்படத்தில் நடிப்பதுபற்றி இயக்கம்தான் எப்போதுமே என்னோட ஒரே பேஷன். அதுக்காத்தான் சினிமாவுக்கு வந்தேன். அதனால அது எப்போதுமே ஸ்பெஷல். இமைக்கா நொடிகள் படத்துல டப்பிங் பேசுனதுக்குக் காரணம் முழுக்க முழுக்க அந்தப் படத்தோட இயக்குநர் அஜய் ஞானமுத்து மட்டும்தான். இப்போ இந்தப் படத்துல நான் நடிக்கிறதுக்குக் காரணம், இதுல எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசரா இருக்குற குமார்தான். அவர் `இயற்கை' படத்தோட தயாரிப்பாளர், நீண்ட நாள் நண்பரும்கூட. அவர்தான் என்கிட்ட இந்தப் படத்தப்பத்தியும், என் கதாபாத்திரம் பத்தியும் சொல்லி இயக்குநர் ரோகாந்த்தையும் என்னையும் சந்திக்கவெச்சார். ரோகாந்த் என்கிட்ட என்னோட கேரக்டரைப் பத்திச் சொல்லும்போது எனக்கும் பிடிச்சது நடிக்க ஓ.கே சொல்லிட்டேன் என்றார்.