நடிகரும், தொழிலதிபருமான ஆர்.கே.விற்கு மலேசிய அரசு டத்தோ விருது வழங்கி கெளரவித்துள்ளது !

வெற்றி விழா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஆர்.கே. அவன் இவன், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். நடிகர் மட்டுமில்லாது தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்ட இவருக்கு மலேசிய அரசின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் டத்தோ விருது வழங்கப்பட்டது. நடிப்பு, தொழில் மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் இவரின் நற்செயலை பாராட்டி இந்த விருது வழங்கபட்டுள்ளது. டத்தோ விருதை ஏற்கனவே நடிகர் ராதா ரவி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது நடிகராக ஆர்.கேவும் பெற்றுள்ளார்.