நடிகர் ஆரி ஆரியார்ஜுனனாக மாறினார் !

நெடுஞ்சாலை படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஆரி. இப்படத்தை தொடர்ந்து தரணி, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், அலேகா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. தமிழில் முன்னணி நடிகராக வலம் ஆரி தற்போது அவருடைய பெயரை ஆரி அருஜூனா என்று மாற்றி இருக்கிறார். ‘இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜூனா என மாற்றியுள்ளேன். இனி வரும் காலங்களில் ஆரி அருஜூனா என்று என்னை அழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.