நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது !

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. காதலர் தினத்தில் ஆர்யா “நானும் சாயிஷாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் உங்கள் அன்பும் ஆசியும் தேவை” என்று டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆர்யா-சாயிஷா திருமண நிகழ்ச்சிகள் நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கியது. மெகந்தி மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், ஆதித்ய பஞ்சோளி மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை அதே ஓட்டலில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகினர் மற்றும் உறவினர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.