நடிகர் சங்கத் தேர்தல் அறிவிப்பு !

சென்ற பதவிக்காலத்தில் இருந்தவர்களில் துணைத் தலைவர் பொன்வண்ணன் தவிர, நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர். எஞ்சியுள்ள பதவிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதேபோல், கடந்த முறை நாசர், விஷாலை எதிர்த்துப் போட்டியிட்ட சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் நாசர் அணியை எதிர்த்துப் போட்டியிட நடிகர் ஆர்.கே.சுரேஷ் திட்டமிட்டுள்ளார். இவரின் அணியினர் கார்த்தி போட்டியிடும் பொருளாளர் பதவியைத் தவிர மற்ற அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளனர்.  தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூன் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.