நடிகர் சங்கம் ரங்கம்மாள் மற்றும் பிந்துகோஷ்க்கும் உதவி தொகை வழங்கியது…. .

ரங்கம்மாள் பாட்டி தமிழ் படங்களில் பாட்டியாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று அதில் வரும் ரூ.500 கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர் மெரினா கடற்கரையில் பிச்சை எடுப்பதாக சில நாட்களுக்கு முன்பு பரவி வந்த தகவலை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பாட்டியை பற்றி விசாரித்து சென்று பார்த்தால் அங்கு அந்த பாட்டி 500 வருமானம் போதாததால் மெரினாவில் எலக்ட்ரானிக் பொருட்களை விற்று அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் நடிகர் சங்கத்தில் இல்லாவிட்டாலும், அவருக்கு ரூபாய் 5000 உதவி தொகையாக நடிகர் சங்கம் வழங்கியது. இதேபோல் நடிகர் சங்கம் மருத்துவ உதவி இல்லாமல் தவித்து வந்த நடிகை பிந்துகோஷ்க்கும் ரூபாய் 5000 உதவி தொகையாக சென்ற வாரம் வழங்கியது.