நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டி
![](https://kollywoodtalkies.com/wp-content/uploads/2019/06/news-icb6f16094e145bc5777cdeb9086625b.gif)
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. வருகிற 23-ந் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும். இந்த தேர்தலில் நடிகர் விஷாலின் ‘பாண்டவர் அணி’ மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அணியை எதிர்த்து யார்-யார் போட்டியிடுவார்கள் என்பது தெரியாமல் இருந்தது. நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. இந்நிலையில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையில் புதிய அணி களம் இறங்குகிறது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக பாக்யராஜ் அறிவித்து உள்ளார்.