நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவுகள் பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரஜினியின் ஓட்டு பதிவாகவில்லை ஏனெனில் அவர் படப்பிடிப்பு சம்மந்தமாக வெளியூரில் இருந்ததால் அவர் ஓட்டு தபாலில் செலுத்திருந்தார். ஆனால் ஓட்டு தாமதமாக வந்ததால் கணக்கெடுப்பில் சேர்க்கமுடியவில்லை. நடிகர் சங்க தேர்தலில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் அது இருக்க கூடாது என்பது எனது விருப்பம்’ இவ்வாறு கமல் கூறினார்.