நடிகர் சிபிராஜ்க்கு போன் செய்த விஜய்! கூறியது என்ன?

தளபதி விஜய் நல்ல படங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்தால் உடனே நேரம் கிடைக்கும் போது அப்படத்தை பார்த்துவிடுவார். பிறகு அந்த படக்குழுவினரை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பார். சமீபத்தில் சத்யா படத்திற்காக சிபிராஜிற்கு விஜய் போன் செய்து வாழ்த்து கூறியதாக அவரே தன்னுடைய டுவிட்டரில் கூறியிருந்தார். நேற்று நடந்த சத்யா வெற்றிவிழா கொண்டாட்டத்தில், விஜய் அவர்கள் இன்னும் சத்யா படத்தை பார்க்கவில்லை. தற்போது படம் பற்றி நல்ல விமர்சனங்களை கேட்பதாகவும், சில விமர்சனங்கள் படித்ததாகவும் கூறி எனக்கு வாழ்த்து கூறினார். இந்நிலையில் பெரிய நடிகர்கள் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு வாழ்த்து கூறுவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.