நடிகர் சிரஞ்சீவி பண்ணை வீட்டில் பயங்கர தீ விபத்து !

தெலுங்கு திரையுலகின் கதாநாயகனும் மத்திய முன்னாள் மந்திரியுமான நடிகர் சிரஞ்சீவிக்கு ஐதராபாத்தில் உள்ள கோக்காபேட் பகுதியில் மிகப்பெரிய பண்ணை வீடு உள்ளது. தற்போது அவர் நடித்துவரும் ‘சியே ரா நரசிம்ம ரெட்டி’ என்ற திரைப்படத்துக்காக இந்த பண்ணை வீட்டில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அரங்கத்தின் ஒரு பகுதியில் இன்று மாலை திடீரென்று தீ பிடித்தது. காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ அரங்கத்தின் பெரும்பகுதியை நாசப்படுத்தியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர்.