நடிகர் சிலம்பரசனால் தான் நான் இங்கு இருக்கிறேன் – என்று கூறிய பிரபல இளம் டான்ஸ் மாஸ்டர்

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். சிம்பு என்றாலே எப்போதும் அவரை சுற்றி சர்ச்சைகள் மட்டுமே இருக்கும். ஆனால், அவர் பல திறமையான இளைஞர்களை ஊக்குவித்து தன் படங்களின் சான்ஸ் கொடுத்துள்ளார். அப்படித்தான் தொலைக்காட்சியில் கலக்கி வந்தவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் எப்படியாவது சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளார். சாண்டியின் திறமையை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்த சிம்பு, தன் 'வாலு' படத்தில் ஒரு பாடலை நடனம் அமைக்க அழைத்துள்ளார். அதனால் தான் நான் இன்று சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆனேன் என்று சாண்டியே கூறியுள்ளார்.