Cine Bits
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் கொடுத்த புதிய பட்டம்

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் தமிழ்த் திரைப்படத்தில் அடி எடுத்து வைத்து கலக்கிவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இன்று தம்பி ராமையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும் போது சிவகார்த்திகேயனை “இளம் சூப்பர் ஸ்டார்” என்று குறிப்பிட்டார்.