நடிகர் சூரியின் தந்தை காலமானார்

தமிழ் முன்னணி நகைச்சுவை நடிகர் சூரி நேற்று  துயரத்தில் ஆழ்ந்துள்ளார். நேற்று இரவு 10.15 மணிக்கு, அவரின் தந்தை முத்துசாமி  உடல்நல குறைவு காரணமாக காலமானார். 75 வயதாகும் அவரின் தந்தை மதுரையில் உள்ள ராசாக்கூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மறைவு சூரிக்கு கடும் துயரத்தை தந்துள்ளது. அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என கூறப்படுகிறது.