நடிகர் தென்னவன் உடல்நிலை கவலைக்கிடம் !

பாரதிராஜாவின் ‘என்னுயிர் தோழன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தென்னவன். பின்னர் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமானார். திவான், ஜெமினி, சண்டக்கோழி, ஜேஜே, வாகை சூடவா, கத்திச் சண்டை உள்பட பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். 52 வயதாகும் தென்னவனுக்கு திடீரென்று மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை. சம்மேபத்தில் பயங்கர தலைவலியால் துடித்துள்ளார். அதற்கென அவரை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதித்தபொழுது மூலையில் கட்டி இருந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தென்னவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை கலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.