நடிகர் பாபிசிம்ஹா பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் ‘சீறும் புலி’

மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலுமஹேந்திராவின் மாணவர் – இயக்குனர் ஜி.வெங்கடேஷ்குமாரின் வியக்கவைக்கும் புதுப்படைப்பு 'சீறும் புலி'.இயக்குனர் ஜி. வெங்கடேஷ்குமாரின் புதிய படைப்பில், நடிகர் பாபி சிம்ஹாவின் பிரம்மாண்டமான நடிப்பில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரையுலகில் முதன்முறையாக வெளியாக இருக்கிறது.

தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நேற்று இந்த தகவல் வெளியிடப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.