நடிகர் பிரகாஷ் ராஜ் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு!

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் கெஜ்ரிவால் உடனான இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. அவருக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து கூறியிருக்கிறார். அதேபோன்று ஆம் ஆத்மி தரப்பில் இருந்தும் பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், 2017-ம் ஆண்டு இந்துத்துவ அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை பற்றியும் நடிகர் பிரகாஷ்ராஜ் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கலந்துரையாடியிருக்கிறார்.