நடிகர் பிரபாசுக்கு விரைவில் திருமணம் – தொழிலதிபர் மகளை மணக்கிறார் !

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். பாகுபலி தமிழிலும் வெற்றி பெற்றதால் தமிழ் நாட்டிலும் அவருக்கு மார்க்கெட் உள்ளது. பிரபாசின் தெலுங்கு படங்களை தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். தற்போது சாஹோ என்ற படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. பிரபாசுக்கு 39 வயது ஆகிறது. எனவே விரைவில் அவரது திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாஹோ படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வந்ததும் திருமணம் ஏற்பாடுகள் தொடங்க உள்ளன. அமெரிக்க தொழில் அதிபர் மகளை மணக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஓரிரு மாதங்களில் நிச்சயதார்த்தத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த வருடம் இறுதியில் பிரபாஸ் திருமணம் நடக்கும் என்று அவரது உறவினர் தெரிவித்து உள்ளார். பிரபாசுக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்றும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.