நடிகர் விக்ரமிற்கு இயக்குனர் பாலா வக்கீல் நோட்டீஸ் !

நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் அறிமுகமாகும் படம் ஆதித்திய வர்மா. அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமான இதை முதலில் பாலா வர்மா என்ற பெயரில் இயக்கியிருந்தார். அந்த படம் விக்ரம் மற்றும் தயாரிப்பாளருக்கு பிடிக்காததால் வர்மா படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்திய வர்மா என்ற பெயரில் மீண்டும் படமாக்கி வருகிறார். அந்த படத்தில் நான் இயக்கிய காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்று தான் பாலா எச்சரித்து இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.