நடிகர் விஜய்யின் 64-வது படம் – கதாநாயகியாக ராகுல் ப்ரீத்சிங் !

விஜய்யின் 63 படத்தின் தலைப்பையும், விஜய் தோற்றத்தையும் அவரது பிறந்த நாளையொட்டி வருகிற 21-ந் தேதி மாலை வெளியிடுகிறார்கள். விஜய்யின் 64-வது படத்தை அவரது உறவினரான பிரிட்டோ தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே செந்தூரபாண்டி, ரசிகன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார். இசையமைப்பாளராக அனிருத்தையும், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியனையும் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர். கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்கை பரிசீலிக்கின்றனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.