நடிகர் விவேக்கிற்கு சிவாஜி சமூக நல பேரவை கண்டனம் !

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், 1960ம் ஆண்டு வெளிவந்த இரும்புத்திரை படம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்துள்ள நடிகர் திலகம் சிவாஜி சமூகநல பேரவை, மேடை கிடைத்துவிட்டால் சிலர் உளற ஆரம்பித்து விடுவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிவாஜி நடித்த பராசக்தி படத்தில் வரும் வசனத்தை பேசி விவேக் கிண்டலடித்துள்ளதாக தெரிவித்துள்ள சிவாஜி சமூகநல பேரவை, தொடர்ந்து நடிகர் விவேக் இதுபோன்று நடந்து கொண்டால் அவரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.