நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி வாரண்ட்

விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்து  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கை நீதிமன்றம் வரும் 28 ந்தேதிக்கு ஒத்திவைத்தது.