நடிகர் ஷாருக்கானுக்கு டாக்டர் பட்டம்!

பொலிவுட் கிங் எனப்படும் ஷாரூக்கான். பல படங்களில் நடித்தவர். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இந்நிலையில், ஐதராபாத் நகரில் உள்ள மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்படுகிறது. இதை இந்திய ஜனாதிபதி வழங்குகிறார்.