நடிகவேல் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாறு – சிம்பு, அரவிந்த் சாமி !

சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை இயக்கிய ஐக் தனது தாத்தா நடிகவேல் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக அறிவித்தார். ராதிகா சரத்குமார் தனது ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் அந்த படத்தை தயாரிக்கிறார். படத்தில் சிம்பு எம்.ஆர். ராதாவாகவும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர். ஆகவும் நடிக்க உள்ளார்களாம். இது குறித்து அவர் கூறியதாவது, பலரும் அவரை வில்லனாக தான் திரையில் காட்டினார்கள். ஆனால் அவர் ஒரு நல்ல அப்பா. அது குறித்து குடும்பத்தாருக்கு மட்டுமே தெரியும். படத்தில் என் தாத்தாவின் கொள்கைகளை காட்டுவேன் என்றார்.