நடிகைகளை வெறும் கவர்ச்சிப் பொருளாக பார்க்காதீர்கள் – நடிகையான மாடல் அழகி!

கே.ஆர்.சந்துரு இயக்கும் போதை ஏறி  புத்தி மாறி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார், மாடல் பிரதைனி சர்வா. குறும்படங்களில்  நடித்த தீரஜ், கதையின் நாயகனாக நடிக்கிறார். படம் குறித்து பிரதைனி சர்வா கூறுகையில், நடிகைகள் வெறுமனே பார்பி  பொம்மைகள் அல்லது கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது. டைரக்டர்   சந்துரு கதையையும், என் கேரக்டரையும் விளக்கியபோது, பிருந்தா என்ற எனது  கேரக்டர் மிகவும் பிடித்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ என்றார்.